எல்லோருக்கும் வணக்கம்...வந்தனம்..... நமஸ்தே.....இன்னைக்கு ஆகஸ்ட் 15. நம்ம நாட்டுக்கு சுதந்திர நாள். இன்னைக்கு நம்ம வலையுலகில் ஒரு புதிய அத்தியாயமாக ஒரு வலைப்பதிவை துவங்குகிறோம்.
இதற்கு சுட்டதில் சுட்டது என்ற தலைப்பு வைத்துள்ளோம். காரணம், இப்பொதெல்லாம் திருடுவது(சுடுவது) சர்வ சாதாரணமாக செய்யப்படுகிறது. உலக சினிமாக்கள் எல்லாம் சுடப்பட்டு தமிழ்படமாக வருகிறது. பிற விஷயமுள்ள பதிவர்களால் வலையேற்றப்படும் விஷயங்களெல்லாம் மேல்மாடி(மூளை) காலியான, கிரியேட்டிவிட்டி இல்லாத பதிவர்களால் சுடப்பட்டு அவரவர் பெயர்களில் வலம் வருகிறது. பிரபல பத்திரிகைகளின் செய்திகளெல்லாம் ஹிட்ஸுக்காக சுடப்பட்டு பிரபலமாகிறது.
அப்படி சுடுபவர்களின் பதிவையே சுடச்சுட சுட்டு உங்களுக்கு ஒரு கதம்பமாய் தருவதுதான் எங்களின் நோக்கம். அதாவது கஷ்டப்பட்டு வடை சுட்ட பாட்டியின் வடையை காக்கா தூக்கிட்டு வந்து அதை நரியிடம் பறிகொடுக்கும் கதை போல....இனி வரும் காலங்களில் சுட்டு தரப்போகும் செய்திகளால்....இனி ஒரு வாசகர் கூட ஆ.வி., ஜூ.வி., குமுதம், நக்கீரன் போன்ற பத்திரிக்கைகளுக்கு சந்தா கட்ட வேண்டியதில்லை என்று பெருமையுடன் சொல்லிக்கொள்கிறோம்.
ஆனாலும், நாங்கள் எந்தப்பத்திரிகை செய்தியையும் சுடமாட்டோம் என்று உறுதியளிக்கிறோம். அட....யாருங்க தேவையில்லாமல் அந்த பத்திரிக்கையை வாங்கி படித்து, பின் அந்த செய்தியை கை வலிக்க, விரல் கடுக்க டைப் பன்னுவது? அதனால்தான் அப்படி அந்த செய்தியை, வெளி நாட்டில் இண்டெர்னெட் கனெக்சனுக்கு டாலர்களில் சந்தாகட்டிவிட்டு, பத்திரிகை வாங்கி படிக்க பணமில்லாமல் தடுமாறும் நண்பர்களுக்காக சுட்டுப்போட்டுக்கொண்டிருக்கும் பதிவர்களிடமிருந்தே பதிவை சுடப்போகிறோம்.
அதே நேரம், வலைப்பதிவு தர்மத்தையும் மீறப்போவதில்லை....ஆமாங்க... நாங்கள் யாரிடமிருந்து ஒரு பதிவை சுடுகிறோமோ அவர்களின் பெயரை போட்டு நன்றி தெரிவித்து விடுவோம்....சுட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே.....ரைட்டு வரட்டா.....மீண்டும் சந்திப்போம்

நல்வரவு உண்டாகுக
ReplyDelete